கிருஷ்ணகிரி: ஒசூர் சிப்காட் பகுதியில் பிரபல சிகரெட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூரில் சிகரெட் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர் கடத்தல்! - ஓசூரில் சிகரெட் கம்பெனி எச்ஆர் கடத்தல்
![ஒசூரில் சிகரெட் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர் கடத்தல்! ஓசூரில் சிகரெட் கம்பெனி எச்ஆர் கடத்தல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9743799-thumbnail-3x2-live.jpg)
ஓசூரில் சிகரெட் கம்பெனி எச்ஆர் கடத்தல்
22:46 December 02
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் பகுதியில் பிரபல சிகரெட் கம்பெனி அலுவலராகப் பணியாற்றிவருபவர் பீட்டர் லிட். டிசம்பர் 02 அன்று வழக்கம்போல், இவர் தனது பணி முடிந்து தர்கா பகுதி அருகே அண்ணாமலை நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஏழு பேர் கொண்ட கும்பல் பீட்டர் லிட்டை காரில் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:சொத்து குவிப்பு வழக்கு; ஜனவரி 27 விடுதலையாகிறார் சசிகலா?
Last Updated : Dec 3, 2020, 6:27 AM IST