தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிரட்டல் புகார்: கர்நாடக காவல் துறையிடம் விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு காவல் துறையினர்! - கர்நாடக போலிஸ் மிரட்டல்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே அடகுக் கடைக்காரர்களை கர்நாடக காவலர்கள் மிரட்டுவதாகக்கூறி சூளகிரி காவல் துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து, கர்நாடக காவலர்களை தமிழ்நாடு காவல் துறையினர் அழைத்து விசாரித்தனர்.

அடகு கடைக்காரர்களை கர்நாடக போலிஸ் மிரட்டுவதாக சூளகிரி காவல்நிலையத்தில் புகார்
அடகு கடைக்காரர்களை கர்நாடக போலிஸ் மிரட்டுவதாக சூளகிரி காவல்நிலையத்தில் புகார்

By

Published : Sep 22, 2020, 8:56 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி காவல் நிலையத்தில் கர்நாடக மாநில காவல் துறையினர் அத்துமீறி நடப்பதாகக்கூறி, தங்க நகை அடகுக் கடை உரிமையாளர்கள் புகார் மனு அளித்துள்ளனர். அடகுக்கடை உரிமையாளர்கள் புகார் மனுவில் சூளகிரி, அத்திமுகம், பேரிகைப் பகுதிகளில் ஏராளமான வடமாநில பான் புரோக்கர்கள் தங்க நகை அடகுக்கடை வைத்துள்ளனர். இவர்களிடம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய அன்றாடத் தேவைகளுக்கு நகைகளை அடமானம் வைத்துப் பணம் பெற்று வருகின்றார்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் திருடப்படும் திருட்டு நகைகள் சூளகிரி அடகுக் கடைகளில் வாங்கப்படுவதாகக்கூறி, கர்நாடக மாநிலம் - பெங்களூரு, ராமமூர்த்தி நகர் காவல் துறையினர் கொள்ளையர்களுடன் வந்து, நகை அடகுக் கடை உரிமையாளர்களை மிரட்டிப் பணம் பெற்றுச் செல்வதாக அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

புகாரின் அடிப்படையில் கர்நாடக மாநில காவலர்கள் 6 பேர் சூளகிரிக்கு வரவழைக்கப்பட்டு சூளகிரி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டது.

அப்போது கர்நாடக காவல் துறையினர் கூறுகையில், 'குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அடகுக் கடைகளில் விசாரணை மேற்கொண்டோம்; அடகுக் கடைக்காரர்கள் திருட்டு நகைகளை வாங்கியிருப்பதற்கான ஆதாரம் இருக்கிறது. இதுகுறித்து நீதிமன்ற வழிகாட்டுதல்படி கர்நாடக காவல் துறையினர் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என சூளகிரி காவல் துறையினர் அறிவுறுத்தினர்' எனத் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து கர்நாடக மாநிலம், ராமமூர்த்தி நகர் காவல் துறையினரும் தங்களின் பணியை செய்யவிடாமல் தடுத்து முற்றுகையிட்டதாக அடகுக் கடை உரிமையாளர்கள் மீது புகார் மனு அளித்துள்ளனர். கர்நாடக காவல் துறையினரை தமிழ்நாடு காவல் நிலையத்திற்கு வரவழைத்து சூளகிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

சட்டவிரோதமாக கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்றவர் கைது

ABOUT THE AUTHOR

...view details