தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அணையில் நுரை பொங்கி வரும் ரசாயன கழிவுகள் - ஆபத்தை உணராத குழந்தைகள்! - நுரைப்பொங்கி வரும் ரசாயன கழிவுகள்

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் பனிகட்டிகளைப் போன்று ரசாயன நுரைப்பொங்கி காட்சியளிக்கிறது. அந்த நுரையில் குழந்தைகள் ஆபத்தை உணராமல் விளையாடி வருகின்றனர்.

Etv Bharat அணையில் நுரைப்பொங்கி வரும் ரசாயன கழிவுகள்
Etv Bharat அணையில் நுரைப்பொங்கி வரும் ரசாயன கழிவுகள்

By

Published : May 6, 2023, 4:03 PM IST

அணையில் நுரைப்பொங்கி வரும் ரசாயன கழிவுகள்

கிருஷ்ணகிரி:கர்நாடகா நந்திமலையில் உற்பதியாகும் தென்பெண்ணை ஆறு, வரத்தூர் ஏரி வழியாக பெங்களூர் பெருநகரத்தின் கழிவுநீர் கலந்தும் தென்பெண்ணை ஆற்றின் எல்லையோரமாக உள்ள தொழிற்சாலைகளின் ரசாயான கழிவுநீர் கலந்து தமிழ்நாட்டின் கெலவரப்பள்ளி அணைக்கு ரசாயன கழிவுகளுடன் கருநிறத்தில் நீர் வருகிறது.

கடந்த சில தினங்கள் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றிலில் வெளியேறும் நீரில் நுரை அதிகரித்து காணப்பட்ட நிலையில் கர்நாடகா மாநிலத்தில் பெய்த மழையால் ஒரு வாரத்திற்கு மேலாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து கனிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று விநாடிக்கு 655 கனஅடி நீர்வரத்து இருந்தநிலையில் இன்று 720 கனஅடி நீராக அதிகரித்து வந்துகொண்டிருக்கிறது.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5 மதகுகள் வழியாக 720 கனஅடி நீர் திறந்துவிடப்படும் நிலையில் நீரில் அதிகப்படியான நுரைப்பொங்கி காட்சியளிக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரமாக உள்ள தொழிற்சாலை கழிவுகள் மழை காலங்களில் ஆற்றில் தேக்கி வைக்கும் ரசாயன கழிவுநீர் கலப்பே நுரைப்பொங்குவதற்கான காரணமாக என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்படுவது நீரா அல்லது நுரையா என்கிற அளவிற்கு நீர் காட்சியளிக்காமல் நுரைக்காட்சியளிக்கிறது. 2 அடி உயரத்திற்கு பொங்கும் ரசாயன நுரைகள் ஆற்றங்கரையோரமாக காற்றில் பறந்து பணிகட்டிகளை போல படர்ந்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், அந்த நுரையிலும் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் ஆபத்தை உணராமல் நுரையை எடுத்து விளையாடி வருகின்றனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் குழந்தைகள் சென்று விளையாடுவதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தஞ்சையில் ஜமாத் தலைவருக்கு பார்சலில் மண்டை ஓடு.. இளைஞர் பகீர் வாக்குமூலம்!

ABOUT THE AUTHOR

...view details