கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பென்னிக்கல் கிராமத்தில் பதினைந்து வயது சிறுமி ஒருவருக்கு இன்று சட்டவிரோதமாகக் குழந்தைத் திருமணம் நடைபெறவிருப்பதாக உத்தனப்பள்ளி காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர் அந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
ஓசூர் அருகே குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்! - கிருஷ்ணகிரி மாவட்டச் செய்திகள்
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்தைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
hosur
அதைத் தொடர்நது காவல் துறையினர் விசாரணையில், அந்த 15 வயது சிறுமி கெலமங்கலம் கிராமத்தில் வசித்துவரும் பீமன் மகள் என்பதும், மணமகன் பென்னிக்கல் கிராமத்தில் வசித்துவரும் கோபால் மகன் எல்லேஷ் (25) என்பதும் தெரியவந்தது. மேலும் இது குறித்து காவல் துறையினர் அவர்களின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:பெங்களூருவில் 16 வயது சிறுவனுக்கு கட்டாய திருமணம் !