தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர் நிலைகளை பாதுகாக்கும் குடிமராமத்து பணி திட்டம் - inspection

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டிலுள்ள நீர் நிலை ஆதாரங்களை பாதுகாக்க குடிமராத்து திட்டத்தின் கீழ் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அசோகன் தெரிவித்தார்.

krishnagiri
krishnagiri

By

Published : Jun 14, 2020, 10:56 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரபள்ளி அணையில் வலது, இடது புற கால்வாய்கள் சீரமைக்கும் பணி ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை, மாநில பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அசோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலை ஆதாரங்களை பாதுகாக்க குடிமராமத்து திட்டத்தின் கீழ் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள், குளங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரியை பொறுத்தவரையில் ரூ. 6 கோடியே 18 லட்சம் மதிப்பில் 11 பணிகள் நடைபெறுகிறது.

குடிமாராமத்து பணிகள் சிறப்பாகவும், தரமாகவும் நடைபெற உயர் அலுவலர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். மழை காலத்திற்கு முன்பாகவே இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும்" என்றார்.

இதையும் படிங்க:வளர்ச்சி குறித்த விவரங்களை அரசு பூட்டி வைத்து கொள்ளுமா? - ப.சிதம்பரம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details