கிருஷ்ணகிரி:ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நேற்று விநாடிக்கு 794 கனஅடிநீர் வரத்தாக இருந்தநிலையில் இன்று விநாடிக்கு 1099 கனஅடிநீர் வரத்து உள்ளது. அணையின் முழுக்கொள்ளளாவன 44.28 அடிகளில் தற்போது 40.18 அடிகள் நீர் உள்ளது. அணையில் இருந்து 820 கனஅடி நீரானது 6 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீரில் குவியல் குவியலாக நுரைப்பொங்கி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் கர்நாடகா மாநில தென்பெண்ணை ஆற்றங்கரையோர தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் கலப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.