தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலை வாங்கித் தருவதாக 300 இளைஞர்களிடம் மோசடி!

கிருஷ்ணகிரி: வேலை வாங்கித் தருவதாக கூறி  கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஓசூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

வேலை வாங்கி தருவதாக 300க்கும் இளைஞர்களிடம் மோசடி

By

Published : May 22, 2019, 11:40 PM IST

ஓசூர், வேப்பனஹள்ளி, சூளகிரி, சின்னாறு, குருபரப்பள்ளி, கிருஷ்ணகிரி, சென்னசந்திரம், ராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, தனசேகரன் அவரது நண்பர்கள் அனுகியதாக கூறப்படுகிறது. இதை நம்பிய இளைஞர்கள் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை செலுத்தியுள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக 300க்கும் இளைஞர்களிடம் மோசடி

ஆனால், சொன்னப்படி வேலையும் வாங்கித் தரவில்லை. பணமும் திரும்ப கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வேலை மற்றும் பணம் குறித்து கேட்டபோது சரியான பதில் இல்லை. ஏமாற்றத்தை பட்டதை அறிந்த இளைஞர்கள், ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர். அப்போது, நகர காவல்துறையினர், அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர். பின்னர் அவர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details