தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை - பல கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை

சென்னை: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கைப்பேசிகளை ஏற்றிவந்த லாரி ஓட்டுநர்களைத் தாக்கி, பல கோடி ரூபாய் மதிப்பிலான கைப்பேசிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

லாரி
லாரி

By

Published : Oct 21, 2020, 11:41 AM IST

சென்னை பூவிருந்தவல்லியிலிருந்து கன்டெய்னர் லாரியில் பல கோடி மதிப்பிலான எம்.ஐ. கைப்பேசிகளை ஏற்றிக்கொண்டு, மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மேலுமலை என்னுமிடத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது லாரி டிரைவர்களான அருண் (26), சதீஷ் குமார்(29) ஆகிய இருவரையும் தாக்கிய கொள்ளை கும்பல் லாரியில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கைப்பேசிகளை திருடிச்சென்றனர். காயமடைந்த டிரைவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளைக் கும்பலை பிடிக்க ஒசூர் டிஎஸ்பி முரளி தலைமையிலான 10 பேர்கள் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கப்பட்டது என அம்மாவட்ட காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details