தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழு கிராம மக்கள் இணைந்து நடத்திய எருது விடும் விழா! - கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எருது விடும் விழா

கிருஷ்ணகிரி: பூசாரிப்பட்டியில் ஏழு கிராம மக்கள் ஒன்றிணைந்து, எருது விடும் விழாவை நடத்தினர்.

எருது விடும் விழா
எருது விடும் விழா

By

Published : Jan 21, 2020, 10:57 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டியை முன்னிட்டு எருது விடும் விழா பல்வேறு கிராமங்களில் வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள பூசாரிப்பட்டி, அதனை சுற்றியுள்ள ஏழு கிராம மக்கள் ஒன்றுணைந்து எருது விடும் விழாவை நடத்தினர்.

இந்த விழாவை கிருஷ்ணகிரி, பூசாரிப்பட்டி, கரடியூர், கம்பம்பள்ளி காவேரிப்பட்டிணம், சவூளுர், திம்மாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருதுகளை கொண்டுவந்தனர்.

பின்னர், கரடியூர் மாரியமன் கோயில் அருகே கொண்டுவந்து, ஒவ்வொரு எருதாக பொது மக்கள் மத்தியில் அவிழ்த்துவிடப்பட்டது. துள்ளிக்கொண்டு சென்ற எருதுகளை இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர்.

எருது விடும் விழா

பொது மக்கள் மத்தியில் சீறிப் பாய்ந்த எருதுகளை கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பொங்கலை யொட்டி நடத்தப்பட்ட இந்த எருது விடும் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: கோலாகலமாக நடைபெற்ற எருதுவிடும் விழா

ABOUT THE AUTHOR

...view details