கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சீபம் கிராமத்தில் பாரம்பரியமான எருதுவிடும் விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது. இதில், ஹெலிகாப்டர் மூலம் பார்வையாளர்கள் மீது ரோஜா மலர்களை தூவி எருதுவிடும் விழா தொடங்கியது.
ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் காளைகள் கலந்துகொண்டன. சீறி வந்த காளைகளை காளையர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.