கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சத்திய நாராயண நகர் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள சத்திய நாராயண திருக்கோயிலில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனா்.
உண்டியலை உடைக்க முடியாததால் அதனைத் தூக்கிச்சென்றுள்ளனா். இது குறித்து கோயில் நிர்வாகிகள் ஹாட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர், திருட்டு நடைபெற்ற கோயிலிலிருந்த தடயங்களைச் சேகரித்தனர்.