கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதி வாணியர் தெருவை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் - சகுந்தலா தம்பதி. இவர்களது இரு மகன்கள் பகவதி, முரளி ஆவர். இன்று (ஆகஸ்ட் 24) வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை கரைக்க சூளகிரி துரை ஏரிக்கு சென்றுள்ளனர். சிலையை ஏரியில் விட்ட பிறகு, ஆழப்பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றது அறியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவர்கள் உயிரிழப்பு - Small boys died
கிருஷ்ணகிரி: சூளகிரி துரை ஏரியில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
boys who went to dissolve the Ganesha statue were died
பின்னர் தகவல் அறிந்த சூளகிரி காவல்துறையினர் விரைந்து வந்து இரண்டு உடல்களையும் மீட்டு, சூளகிரி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இரண்டு சிறுமிகள் கிணற்றுக்கு குளிக்கச் சென்றபோது, தவறி விழுந்து உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.