இரண்டு தினங்களுக்கு முன்பாக தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “தலைமைச் செயலர் எங்களை மூன்றாம் தர மக்களைப்போல நடத்தினார். நாங்கள் எல்லாம் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?” என்று பட்டியலின சமூகத்தினரை இழிவுபடுத்தும்வகையில் பேசியிருந்தார்.
இது பல்வேறு விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில் தமிழ்நாடு பாஜக சார்பில் தயாநிதி மாறனை கைதுசெய்யக்கோரி மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டுவருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல்நிலையத்தில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பாஜக மாநிலச் செயலாளர் நரேந்திரன் தலைமையில் தயாநிதி மாறனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நரேந்திரன், “முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பட்டியலின சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சு அவர்களை அவ்வாறுதான் நடத்துகிறார்களா? என்கிற கேள்வி எழுப்புகிறது.