தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பிற கட்சி பற்றி பேச விரும்பவில்லை' - அதிமுக குறித்த கேள்விக்கு நழுவிய அண்ணாமலை!

அதிமுக பொதுச் செயலாளராக ஈபிஎஸ்ஸை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தொடர்பான கேள்விக்கு, பிற கட்சி பற்றி பேச விரும்பவில்லை என அண்ணாமலை நழுவும் வகையில் கூறியுள்ளார்.

‘பிற கட்சி பற்றி பேச விரும்பவில்லை’ - அதிமுக குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்
‘பிற கட்சி பற்றி பேச விரும்பவில்லை’ - அதிமுக குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்

By

Published : Apr 20, 2023, 5:21 PM IST

அண்ணாமலை பேட்டி

கிருஷ்ணகிரி: ஓசூருக்கு அருகே கர்நாடகாவில் ஆனேக்கல் நகரில், ஆனேக்கல் சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் உள்ளஹள்ளி சீனிவாசனின் வேட்புமனு பேரணி இன்று (ஏப்ரல் 20) நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மத்தியில், வேட்பாளர் உடன் தமிழ்நாடு பாஜக தலைவரும் கர்நாடக மாநிலத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அண்ணாமலை பிரசார வாகனத்தில் பயணித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பிற கட்சியைப் பற்றி பேச விரும்பவில்லை” என நழுவும் வகையில் பதில் அளித்தார்.

மேலும், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தனித் தனி வேட்பாளர்களை அறிவித்தது தொடர்பான கேள்விக்கும், ''பிற கட்சிப் பற்றி பேச வேண்டாம்'' எனத் தெரிவித்த அண்ணாமலை, ''கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 130 தொகுதிகளில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். இன்னும் பிரதமர் மோடியின் பேரணி நடைபெறவில்லை'' என்றார்.

முன்னதாக, இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது. அதேநேரம், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி, அம்மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கர்நாடகாவின் புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக, கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேநேரம், புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பில் நெடுஞ்செழியன், கோலார் தங்க வயல் தொகுதியில் ஆனந்தராஜ் மற்றும் காந்தி நகர் தொகுதியில் குமார் ஆகியோரை வேட்பாளராக நிறுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Edappadi Palanisamy: ஈபிஎஸ்-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம்.. இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details