தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஊருக்குச் செல்வோம், உண்மையே சொல்வோம், உரக்கச் சொல்வோம்' - பாஜகவின் சி.ஏ.ஏ. விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த எதிர்க்கட்சிகளின் பொய்ப் பரப்புரையை முறியடிக்க தமிழ்நாட்டில் விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கவுள்ளதாக பாஜக மாநிலச் செயலாளர் கே.டி. ராகவன் தெரிவித்துள்ளார்.

raghavan
raghavan

By

Published : Mar 18, 2020, 7:58 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜகவின் 'ஊருக்குச் செல்வோம், உண்மையே சொல்வோம், உரக்கச் சொல்வோம்' என்ற பெயரில் விழிப்புணர்வுப் பரப்புரை செய்வதற்கான பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.டி. ராகவன் பேசியதாவது:

தமிழ்நாட்டில் இஸ்லாமிய மக்களைக் கொண்டு திமுக தவறான முறையில் பொய்ப் பரப்புரையை முன்னெடுக்கின்றது. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இஸ்லாமிய மக்களும் தற்போது தெரிந்துகொண்டு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

ஆனால், திமுக போன்ற எதிர்க்கட்சிகள் அவர்களைக் குழப்பி, போராட தூண்டுவதன்மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளின் பொய்ப் பரப்புரையை முறியடிக்கும் வகையில் 'ஊருக்குச் செல்வோம், உண்மையே சொல்வோம், உரக்கச் சொல்வோம்' என்ற பெயரில் வருகின்ற 20ஆம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை வீடுகள்தோறும் இந்தச் சட்டம் குறித்து ஐந்து பேர் கொண்ட பல குழுக்களாகச் சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளோம்.

பொய்ப் பரப்புரையை முறியடிக்கத் தேவையான பயிற்சிகள் இன்று (மார்ச் 17) வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:கரோனா எதிரொலி: சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் அதிரடி உயர்வு!

For All Latest Updates

TAGGED:

PARTY TAGS

ABOUT THE AUTHOR

...view details