தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூரில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்! - today Krishnagiri news

ஓசூர் மீன் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

ஓசூரில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்!
ஓசூரில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்!

By

Published : Feb 10, 2023, 2:12 PM IST

ஓசூர் மீன் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்

கிருஷ்ணகிரி: ஓசூர் பேருந்து நிலையம் அருகே பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இந்த நிலையில் இங்குள்ள பல மீன் கடைகளில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மீன்கள் தரம் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாகவும் மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது.

இந்த புகார்களின் அடிப்படையில், இன்று (பிப்.10) மாநகராட்சி உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில், தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை உயிருடன் வளர்த்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கடையில் இருந்த ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.

அதேபோல் அங்கு இருந்த பல்வேறு கடைகளில் தரம் இல்லாத மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மீன் கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட நெகிழி பாக்கெட்டுகளையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:குமரியில் மீன்கள் விலை உயர்வு.. அசைவ பிரியர்கள் ஷாக்!

ABOUT THE AUTHOR

...view details