கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அதிமுக ஒன்றிய மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி தலைமை வகித்தார். மேலும், அதிமுக பேச்சாளர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, மேடையில் பேசிய பாலகிருஷ்ணா ரெட்டி, ‘தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை விட 10 மடங்குகள் அதிகமாகத் தமிழர்கள் தமிழ் மொழிக்காகப் போராடி இந்தி திணிப்பை எதிர்த்தனர். தமிழ் மொழி உரிமை போராட்டத்தை காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியாமல், ஆந்திரா, கர்நாடகா காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர்’ என்றார்.