வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளாராக ராமச்சந்திரன் என்பவர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் நகர செயலாளர் சலாம் பாய் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவர் மீது முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் பலத்த காயமைடந்த சலாம் பாய் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.