தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருப்பமின்றி பணிமாறுதல் ஆணை.. ஓசூர் காவலர் எடுத்த விபரீத முடிவு! - தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரியில் ஆயுதப்படை காவலர் ஒருவர் திடீரென செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat ஆயுதப்படை காவலர் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி
Etv Bharat ஆயுதப்படை காவலர் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி

By

Published : Feb 22, 2023, 8:31 PM IST

ஆயுதப்படை காவலர் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி

ஓசூர்:கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருபவர் மணிவேல். இவர், இன்று (பிப்.22) காலை கிருஷ்ணகிரி ஆயுதப்படை வளாகம் பின்புறம் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர் கூறும்போது, "என்னுடைய விருப்பமின்றி தன்னுடன் சேர்த்து 8 பேரைப் பணி மாறுதல் செய்துள்ளனர். நாங்கள் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து இப்போதுதான் சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறோம். ஆனால், பணிவு சேர்ந்த இரண்டு மாதத்திலேயே எங்களை பணி மாறுதல் செய்கின்றனர். காவல் துறை பணிபுரிவது மன உளைச்சல் ஏற்படுகிறது.

மேல் அதிகாரிகள் எங்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை’ எனக் கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், காவல் துறைத் தலைவர் நேரில் வந்து தங்களது குறைகளைக் கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர், அவரை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவருடன் சேர்த்து அவருடன் பணிபுரியும் காவலர்களும் கீழே நின்று எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள காவல் துறையினருடன் சண்டையிட்டு வந்தனர். தொடர்ந்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பைக் திருட்டு வழக்கில் தொலைக்காட்சி செய்தியாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details