கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சைல்டு லைன் ஊரக சமுதாய மேம்பாட்டு திட்டம் சார்பாக அங்கன்வாடி தினவிழா நடைபெற்றது.
இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தொடங்கிவைத்தார். பின்னர் ஊட்டச்சத்து, சிறுதானிய உணவு கண்காட்சியை அவர் பார்வையிட்டார். அதன்பின் மாவட்ட ஆட்சியர் விழாவில் பேசுகையில், ”அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளுக்கும், மழலைகளுக்கும் ஏற்படுகின்ற உடல் உபாதைகளை கண்டுபிடித்து அவர்களை நல்ல முறையில் பராமரித்து வருகிறீர்கள்.
சிறுதானிய உணவு கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அரசின் மற்ற துறை பணிகளான கணக்கெடுப்பு, புள்ளி விவரங்கள், வாக்காளர் சரிபார்க்கும் பணி, தேர்தல் பணிகள் என கூடுதலாக பல்வேறு பணிகளை சிறப்பாக செயல்படுத்துகிறீர்கள். அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி மின்விளக்கு, மின்விசிறி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகளை தங்கு தடையின்றி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக அடிப்படை வசதிகள், வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள் குறித்து கோரிக்கை வந்தாலும் உடனடியாக புதிய கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்படும்” என்றார்.
இதையும் படிங்க: அங்கன்வாடி மையம் அருகே பராமரிப்பற்றுக் கிடக்கும் கிணறு - மூட மக்கள் கோரிக்கை!