கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை தாலுக்கா சந்தனப்பள்ளி ஊராட்சி சின்ன பூதகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சென்னப்பா (55). இவர் அப்பகுதியில் அதிமுக கிளைச் செயலாளராக இருந்துள்ளார். இவர் மேய்ச்சலுக்காக ஆடுகளை அப்பகுதியில் விட்டிருந்தார்.
அதில் ஒரு ஆடு காணாமல் போனதால் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நேற்று (ஜூன் 2) இரவு 8 மணியளவில் ஆட்டை தேடி சென்னப்பா சென்றார். அப்போது, அவ்வழியே சுற்றித்திரிந்த ஒற்றை யானை, சென்னப்பாவை துப்பிக்கையால் தூக்கி வீசி மிதித்துக் கொன்றது. இந்நிலையில், ஆட்டை தேடிச் சென்ற சென்னப்பா யானை தாக்கி இறந்து கிடப்பதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.