ஓசூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்துகொண்டு, கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார். அவரது வருகை மக்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மீண்டும் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியை அமைக்கும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்’ என்றார்.