தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்நோக்கு கட்டடம், அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கிவைப்பு! - varatanapalli

கிருஷ்ணகிரி: வரட்டணப்பள்ளி கிராமத்தில் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பல்நோக்கு கட்டடம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு பர்கூர்  சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் தொடங்கிவைத்தார்.

WATER REFINARY  வரட்டணப்பள்ளி  வரட்டணப்பள்ளி அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா  பர்கூர் எம் ஏல் ஏ  varatanapalli  Bargur mla
வரட்டணப்பள்ளியில் பல்நோக்கு கட்டிடம், அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

By

Published : May 20, 2020, 4:49 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம், ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை வரட்டணப்பள்ளியில் கட்டப்பட்டது. இந்த கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டுக்காக கட்டடத்தை திறந்துவைத்தார். வரட்டணப்பள்ளியில் அம்மா சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டுள்ளதால், சுற்றுப்புற கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பல்நோக்கு கட்டிடம், அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்த பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர்

இந்த திறப்பு விழாவில், வரட்டணப்பள்ளி கூட்டுறவு சங்கத் தலைவர் வெற்றிச்செல்வன், ஊராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமி சாம்ராஜ், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் தேடப்படும் குற்றவாளிகள் - என்ஐஏ அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details