தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் தற்போது 1 கோடி வழங்காதது ஏன்? - முன்னாள் அமைச்சர் கேள்வி

கிருஷ்ணகிரி: கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு கோடி வழங்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவராக கோரிக்கை விடுத்த ஸ்டாலின், தற்போது முதலமைச்சரான பின்பு ஒரு கோடி வழங்காதது ஏன்? என ஒசூரில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 1 கோடி வழங்காதது ஏன்? என ஒசூரில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கேள்வி
கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 1 கோடி வழங்காதது ஏன்? என ஒசூரில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கேள்வி

By

Published : Jun 17, 2021, 9:11 PM IST

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுகவின் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒசூர் - பாகலூர் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைப்பெற்றது. முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு ஏராளமான எதிர்கால நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளது. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற ஒருமாதத்திற்குள், ஏன் திமுகவிற்கு வாக்களித்தோம்? என விரக்தி அடையும் வகையில் கட்டுமானப் பொருள்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

திமுகவிடம் கேள்வி எழுப்பிய அதிமுக

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, ‘கரோனாவால் உயிரிழந்தோருக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும்’ என அதிமுக அரசை கேட்டுக்கொண்ட அவர், 'தற்போது முதலமைச்சராகியும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயை வழங்காதது ஏன்?' எனக் கேள்வி எழுப்பினார்.

கட்சி நிர்வாகிகளுக்கு..

மேலும், அவர் கட்சி நிர்வாகிகளிடம் "அதிமுகவில் குழப்பம் ஏற்ப்படுத்த நினைக்கும் சசிகலாவுடன் பேசினாலோ அல்லது கட்சியில் இருந்து நீக்கப்பட்டோருடன் தொடர்பு வைத்துக்கொண்டாலோ அதிமுக தலைமை கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தலைமையின் அறிவுறுத்தலை அதிமுக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details