தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 4, 2020, 10:00 AM IST

ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் பெரும்பான்மையை இழந்த அதிமுக!

கிருஷ்ணகிரி: மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.

AIADMK
AIADMK

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 3 பேரும், திமுக வேட்பாளர் 12 பேரும், அதிமுக வேட்பாளர் 7 பேரும், சுயேச்சையாக ஒருவரும் வெற்றிபெற்றனர். எனவே திமுக அதிமுகவை விட 5 இடங்கள் அதிகம் பெற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் அதிமுகவை பெரும்பான்மையை இழக்கச்செய்தது.

அதேபோல், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிலும் திமுக 88 இடமும், அதிமுக 59 இடமும், பாஜக ஒரு இடமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 20 இடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடமும், தேமுதிமுக 9 இடமும், இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. இப்பதவியிலும் அதிமுக, திமுகவைவிட 19 இடங்கள் குறைந்து தன்னுடைய பெரும்பான்மையை கோட்டைவிட்டது.

இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு நாளை சிறப்பு முகாம் - தேர்தல் ஆணையம்!

ABOUT THE AUTHOR

...view details