தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்: கே.பி முனுசாமி நம்பிக்கை - அதிமுக

கிருஷ்ணகிரி: 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.

முனுசாமி

By

Published : Mar 20, 2019, 8:40 PM IST

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

'தற்பொழுது கிருஷ்ணகிரி மாவட்ட வேட்பாளராக நான் நிறுத்தப்பட்டு உள்ளேன். என் தொகுதி உட்பட 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மக்கள் எங்களுக்கு அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். நீங்கள் தானே நிற்கிறீர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என்று பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த தேர்தலில் எங்களின் அம்மா அவர்கள் இருந்தார். அவர் எங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். தற்பொழுது தொண்டர்களாகிய நாங்களே களத்தில் இறங்கி பணி செய்யவேண்டியது அவசியமாகிறது.

இதனை கருத்தில் கொண்டு தோழமைக் கட்சிகளும் நாங்களும் சிறப்பாக பணியாற்றும் போது நிச்சயமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நிற்கும் நான் வெற்றி பெறுவேன்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details