தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வண்ணாரப்பேட்டையில் பெண்களை தாக்கிய காவல்துறையிர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' - குடியுரிமை திருத்த சட்டம்

கிருஷ்ணகிரி: வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கிய காவல் அலுவலர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தினார்.

action-against-police-attack-on-rebels-zac-mohammed-ansari
action-against-police-attack-on-rebels-zac-mohammed-ansari

By

Published : Feb 18, 2020, 9:26 AM IST

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிறுவப்பட்டு நேற்று (பிப். 17) 13ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, நேற்று பாப்புலர் தினமாக கடைபிடித்து தமிழ்நாட்டில், நாகப்பட்டினம், ஓசூர், திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி, பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

அதன் ஒருபகுதியாக, ஓசூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஓசூர் ராகவேந்திரா கோயில் முதல் ராம் நகர் வரை பேரணியாக வந்தனர். அதில், மத்திய பாஜக அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் அதிமுக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதைத்தொடர்ந்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் சேக் முகமது அன்சாரி பேசும்போது, தேசம் முழுவதும் சிஏஏ, என்ஆர்சி, என்ஆர்பி சட்டங்களை எதிர்த்து மிகப்பெரிய அளவில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமாக இருந்தாலும் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அந்த சட்டத்தை திரும்பப் பெறுவது மக்களாட்சியின் அடையாளமாக இருக்க முடியும். எனவே மத்திய அரசு இதுபோன்ற சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையிர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

தொடர்ந்து பேசிய அவர், சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்களை தாக்கும் அதிகாரம் காவல்துறைக்கு யார் கொடுத்தது, பெண்களை தாக்கிய காவல்அலுவலர்கள் மீது தமிழ்நாட்டின் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்‌.

இதையும் படிங்க: ஆயிரம் பிரசாந்த் கிஷோர்கள் வந்தாலும் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை - நரேந்திரன்

ABOUT THE AUTHOR

...view details