கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவரது மகன் அருண்குமார் (24). இவர் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (நவ.26) மதியம் அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. பின்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நெஞ்சு வழிப்பதாக அவர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட நண்பர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.