கிருஷ்ணகிரி: வேப்பனபள்ளி அருகே நமாஸ்கிரி தெருவை சேர்ந்தவர் சின்னப் பையன் மகன் கிருஷ்ணமூர்த்தி (35). இவர் ஓசூரில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் இவருக்கும் இவரது தந்தைக்கும் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் மனவிரக்தியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று மாலை தாசிகவுண்டபள்ளி கிராமத்தில் உள்ள புளியந்தோப்பில் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.