தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக அரசின் இலவச வேட்டி சேலைக்கு லஞ்சம் - வைரலாகும் வீடியோ! - to give free vetti saree

ஓசூர் அருகே முதியோர் உதவித்தொகை பெறுவோருக்காக பொங்கல் புத்தாடை வழங்க ரூ.20 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளரை லெப்ட் ரைட் வாங்கிய நபரின் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 12, 2022, 2:35 PM IST

தமிழக அரசின் இலவச வேட்டி சேலைக்கு லஞ்சம் - வைரலாகும் வீடியோ!

கிருஷ்ணகிரி:ஓசூர் அடுத்த கொம்மேப்பள்ளி ஊராட்சி, சினிகிரிப்பள்ளி கிராமத்தில் 30-க்கும் அதிகமானோர் முதியோர் உதவித்தொகை (Old Age Pension - OAP) பெற்று வருகின்றனர். இந்நிலையில், கிராம நிர்வாக உதவியாளர் (தலையாரி) முனிராஜ் என்பவர் முதியவர்களிடம் வேட்டி, சேலை வழங்க தலா ரூ.20 லஞ்சமாக வசூலித்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அக்கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர், அவரிடம் "ஏன் முதியோர்களிடம் பணம் வாங்குகிறீர்கள்? அரசு உத்தரவிட்டுள்ளதா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

வயது முதிர்ச்சியின் காரணமாக, உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாமல் துயரப்படும் முதியோர்களின் நலன் கருதி அவர்களுக்கு மாதந்தோறும் முதியோர் உதவித்தொகை (OAP) வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் உதவித்தொகை பெறும் முதியவர் - மூதாட்டிகளுக்கு வருவாய்த்துறையினர் மூலம் பொங்கல் பண்டிகைக்காக வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விதவை சான்றிதழுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ - வைரலாகும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details