கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இராமநாயக்கன் ஏரியின் அருகே சுகில் பாய் என்பவர் இருசக்கர வாகனங்களுக்கு பெயிண்ட் வண்ணம் பூசும் தொழிலை செய்து வருகிறார். இவரது கடையில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீ பற்ற தொடங்கியது. கடையினுள் பெயிண்ட் பொருட்களும், இயந்திரங்களும் இருந்ததால் தீ மளமளவென வேகமாக பரவி கடை முழுவதும் பற்றி எரிந்தது.
ஓசூரில் கடையில் தீ விபத்து - ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் - 3 லட்சம்
ஓசூர் வாகனங்களுக்கு வண்ணம் பூசும் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்ததால் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கடையின் உரிமையாளார் வேதனை தெரிவித்துள்ளார்.
கடையில் தீ விபத்து
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தால் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கடையின் உரிமையாளர் வேதனை தெரிவித்தார்.