கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி தமிழ்நாடு - கர்நாடக எல்லையாக இருக்கிறது. இங்கு வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தினம் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி மாநகராட்சி நிர்வாகத்தினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் அபராதம் வசூல்! - ஓசூரில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபரதம் வசூலிப்பு
கிருஷ்ணகிரி: ஓசூரில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து 8 லட்சம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டிருப்பதாக ஓசூர் மாநாகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
![முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் அபராதம் வசூல்! hosur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11375273-421-11375273-1618227352877.jpg)
hosur
பொதுமக்கள் அதிகளவில் கூடும் ஓசூர் மாநகர பேருந்து நிலையம், உழவர் சந்தை, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் தலா 200 ரூபாய் என அபராதம் விதித்து வசூலித்து வருகின்றனர். இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து 8 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக ஓசூர் மாநகராட்சி ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.