கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே மல்கலக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கப்பா. அவருக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் பன்றிகளுக்கு வெடி மருந்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த அவரது மாடு எதிர்பாராதவிதமாக வெடி மருந்தினை தின்றது. இதையடுத்து வெடி மருந்து வெடித்ததில், மாட்டின் வாய் சிதறி உயிருக்குப் போராடி வருகிறது.
பன்றிக்கு வைத்த வெடியில் மாடு சிக்கிய விபரீதம்! - Cow caught on Explosives
கிருஷ்ணகிரி: காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியில் நாட்டு மாடு சிக்கியதில், மாட்டின் வாய் சிதறிய சம்பவம் கிராமத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாடு சிக்கிய விபரீதம்
இதையறிந்த கங்கப்பா, உடனடியாக கால்நடை மருத்துவரை தொடர்புகொண்டு மாட்டிற்கு தொடர் சிகிச்சையளித்து வருகிறார். இந்த சம்பவம் கிராமத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாமே: மின்னல் தாக்கி பசுமாடுகள் உயிரிழப்பு