கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில், இரண்டு பேர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
லாட்டரி சீட்டு விற்பனை - இருவர் கைது - lottery
கிருஷ்ணகிரி : ஓசூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இருவர் கைது
இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பிரத்தாவன் காலனியை சேர்ந்த சிவகுமார் (48) மற்றும் தாசரிப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (26) என்பவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.