நாடு முழுவதும் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பாளர்கள் பொது சேவை மையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு கணக்கெடுப்புப் பணி நடைபெறும். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், பொருளாதார கணக்கெடுப்புப் பணியை போச்சம்பள்ளி சந்தூர் சாலையில் உள்ள பொது சேவை மையத்தில் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்விற்கு பருகூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் திரு.குப்புசாமி, பொருளியல் மற்றும் புள்ளியல் துறை செபஸ்டின், மாவட்ட பொது சேவை மைய மேலாளர் முனிசாமி, போச்சம்பள்ளி வட்டாட்சியர் கலைச்செல்வி, பருகூர் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.