கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி, அளேசீபம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித்திரியும் வெறி நாய் ஒன்று கிராமப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி இதுவரை பலரையும் கடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அளேசீபம் கிராமத்தில் சாலையோரம் இருந்தோர் மற்றும் பேருந்திற்காக காத்திருந்தோரை அந்நாய் கடித்து குதறியதில் கை, கால் உடல் உள்ளிட்டப் பகுதிகளில் இரத்தக் காயங்களுடன் மூன்று பெண்கள் உட்பட ஏழு பேர், தற்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சாலையில் நடந்து சென்ற 7 பேரை வரிசையாக கடித்த வெறி நாய்! - வெறிநாய் கடி
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சாலையோரம் நடந்து சென்றோர், பேருந்திற்காக காத்திருந்தோர் என தொடர்ச்சியாக ஏழு பேரை வெறி நாய் கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 people bitten by rabies dog in haleseebam
இது குறித்து பேசிய அளேசீபம் கிராமவாசிகள், தொடர்ச்சியாக பொதுமக்களை அச்சுறுத்தி கடித்து வரும் வெறிநாய், மேலும் பலரைக் கடிக்காத வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நகை வாங்குவதுபோல் நடித்து வளையல்களைத் திருடிய பெண்கள்: சிசிடிவியில் பதிவான காட்சிகள்!