கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லை பகுதியாக இருந்து வருகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் சாராயம் காய்ச்சப்படுவதைத் தடுக்க ஒசூர் காவல் கோட்டத்திற்குட்பட்ட சட்ட ஒழுங்கு, மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சட்ட ஒழுங்கு காவல் துறையினர் சார்பில் ஒசூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கு உத்தரவின் பேரில், ஒரு தனிப்படை குழுவும், மது ஒழிப்பு அமலாக்கப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் முரளி உத்தரவின்பேரிலும் ஒரு தனிப்படை என, எரிசாராயம் காய்ச்சப்படுவதைத் தடுக்க இரு பிரிவனரும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒசூர் அடுத்த பேரிகை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரியகுத்தி என்னும் கிராமத்தில் இரண்டு இடங்களில் சாராயம் காய்ச்சப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இரண்டு தனிப்படைகளைச் சேர்ந்த காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.