கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர், சொன்னேபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த பேரிகையைச் சேர்ந்த துணிக் கடை உரிமையாளர் ராஜாராம் என்பவரின் வாகனத்தைச் சோதனை செய்தனர்.
துணிக்கடை உரிமையாளரிடம் ரூ. 6 லட்சம் பறிமுதல்! - கிருஷ்ணகிரியில் பணம் பறிமுதல்
கிருஷ்ணகிரி: பாகலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 6 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
![துணிக்கடை உரிமையாளரிடம் ரூ. 6 லட்சம் பறிமுதல்! 6 லட்சம் ரூபாய் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10938125-708-10938125-1615297172737.jpg)
6 லட்சம் ரூபாய் பறிமுதல்
காரில் உரிய ஆவணங்களின்றி 6 லட்சத்து 5 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில்,பணத்தை வங்கியில் செலுத்த எடுத்து சென்றதாக ராஜாராம் தெரிவித்துள்ளார்.
எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செயுத பறக்கும் படையினர், ஓசூர் சார் ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.