கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுரில் இருக்கும் கெலவரப்பள்ளி அணையின் நீரை கொண்டு அப்பகுதி முழுவதும் விவசாயம் செய்து, அணை சுற்றிலும் விளைநிலங்களே இருந்துவருகின்றன.
கெலரப்பள்ளி அணையில் காட்டு யானைகள் ஆனந்த குளியல்!
கிருஷ்ணகிரி: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருக்கும் ஆறு காட்டு யானைகளால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், அங்கு ஆறு காட்டுயானைகள் வெயிலின் சூட்டை தணிக்க ஆனந்தமாய் குளியலிட்டு வருகின்றன. ஓசூர் பகுதிகளில் காட்டுயானைகள் எந்த திசைக்கு செல்வதென தெரியாமல் தொடர்ந்து கிராமங்களை சுற்றியேவருகின்றன. இதற்கு, வனப்பகுதியில் நிலவும் வறட்சியே காரணம் என்றாலும், விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். வெயில் காரணமாக யானைகளை தற்போது விரட்ட முடியாதென்பதால் வனத்துறையினர் யானைகளை கண்காணித்துவருகின்றனர்.
அணையில் யானைகள் இருக்கின்ற தகவல் வேகமாக பரவியதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்க்க குவிந்துவருகின்றனர். ஆபத்தை உணராமல் யானைகளின் அருகில் செல்ல வேண்டாமென்றும், அணையை சுற்றி உள்ள ஆவலப்பள்ளி,நந்திமங்கலம், சித்தனப்கள்ளி, தட்டிகானப்பள்ளி,தேவசெட்டிப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.