தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தில் கொண்டுவரப்பட்ட 5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்!

ஆந்திர மாநிலத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் பேருந்தில் வைத்து ஐந்து கிலோ தங்க பிஸ்கட்டுகள் கொண்டுவந்த நபரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்
5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்

By

Published : Jun 25, 2021, 1:44 PM IST

ஆந்திரா: கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல் துறையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதனடிப்படையில் கர்னூல் பகுதியிலும் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த தனியார் சொகுசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில், மகாவீர் ஜெயின் என்பவர் ஐந்து கிலோ 85 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டுகள், தங்க நகைகள் ஆகியவற்றை ஆவணங்களின்றி கொண்டுசென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், மகாவீர் ஜெயினையும் கைதுசெய்தனர்.

காவல் துறை விசாரணை

இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், தான் பெங்களூருவில் தங்க நகைக்கடை நடத்திவருவதாகவும், நகைகளை நகைக் கடைக்கு வாங்கிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், நகை வாங்கியதற்காக எவ்வித ஆதாரமோ, முறையான ஆவணங்களோ இல்லாததால் தொடர்ந்து அவரிடம் ஆந்திர காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: 63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமானத்தில் கடத்தி வந்த இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details