இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 2020-2021ஆம் நிதியாண்டில் 19 ஏரிகளை தூர்வாரும் பணிகளுக்ககாக ரூ.1 கோடியே 56 லட்சத்து 870 ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பணிகளை ஆய்வு செய்துவருகிறோம்.
கிருஷ்ணகிரியில் ரூ.1.56 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள்; ஆட்சியர் ஆய்வு
கிருஷ்ணகிரி: குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பில் ஏரிகளை தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
krishnagiri-collecter
அதன்படி,
- கங்கலேரி ராமர் கொட்டாய் கீழ்க்குட்டை ஏரி ரூ.6.31 லட்சம்
- மலைசந்து ஏரி ரூ.7.48 லட்சம்
- இந்திரா குட்டை ஏரி ரூ.5.86 லட்சம்
- கொல்லி ஏரி ரூ.8.70 லட்சம்
- இட்டில்கல் அகரம் ஏரி ரூ. 4.85 லட்சம்
- பெல்லம்பள்ளி திம்மப்பன் ஏரி ரூ. 5.75 லட்சம்
- சிக்கபூவத்தி ஊராட்சி குட்டை ஏரி ரூ. 5.70 லட்சம்
- ஜிஞ்சுபள்ளி பந்தாரப்பள்ளி ஏரி ரூ. 2.30 லட்சம்
- செம்படமுத்தூர் தோனிகுட்டை ரூ. 20.38 லட்சம்
- கோட்டகுண்டு குட்டை ரூ.6.126 லட்சம்
- மேல்மாந்தோப்பு ஏரி ரூ.3.55 லட்சம்
- பச்சிகானப்பள்ளி பையனப்பள்ளி ஏரி ரூ. 5.75 லட்சம்
- மேகலசின்னம்பள்ளி அப்புகுட்டை ஏரி ரூ. 13.56 லட்சம்
- பூக்காரன் குட்டை ரூ.8.35 லட்சம்
- மாலிநாயனப்பள்ளி ஜம்பு ஏரி ரூ. 9.35 லட்சம்
- கல்லுகுறுக்கி முனியப்பன் குட்டை ரூ. 11.45 லட்சம்
- வெங்கடாபுரம் நொச்சி குட்டை ஏரி ரூ. 7.45 லட்சம்
- பெரிய கோட்டப்பள்ளி ஜெட்டேரி ஏரி ரூ. 8.62 லட்சம்
- குருபு குட்டை ரூ.15.30 லட்சம் மதிப்பில் என மொத்தம் 19 ஏரிகள் ரூ.1 கோடியே 56 லட்சத்து 870 மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருவண்ணாமலையில் குடிமராமத்து பணிகள் ஆய்வு!!