விவசாயிகளுக்கும் யானைகளுக்கும் இடையே நிகழும் போர் நீண்டகாலம் ஆகியும் தீர்க்க முடியாமல் உள்ளது. கடின உழைப்புகள் கண் எதிரே வீணாக செல்வதை பார்க்க முடியவில்லை என விவசாயிகள் பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரியில் ஜார்கலட்டி கிராமத்தில் வசித்து வரும் முனியப்பா என்ற விவசாயி, தனது 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். இரண்டு மாதங்கள் கழித்து தக்காளி விற்பனைக்கு ஏதுவாக சரியான தருணத்தில் பயிர் இருந்தது.