கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராமச்சந்திரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக தமிழக அரசின் மதுபான கடை ஒன்று இரண்டு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அந்த அரசு மதுபான கடையின் மேற்பார்வையாளராக மனோகரன் வேலை பார்க்கிறார்.
அரசு மதுபான கடையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளை - மது பாட்டில்கள் கொள்ளை
கிருஷ்ணகிரி: ஓசூரில் அரசு மதுபான கடையில் சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![அரசு மதுபான கடையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளை dfas](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11491064-982-11491064-1619037016345.jpg)
dfas
இவர் வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் மதுபான கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நேற்றிரவு கடையின் கதவை உடைத்து சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.