கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசனட்டி குடியிருப்புப் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சிப்காட் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவயிடத்துக்குச் சென்ற காவல் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி வளைத்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது! - கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்
கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட14 பேரைக் கைதுசெய்த சிப்காட் காவல் துறையினரிமிடருந்து 1 லட்சத்து 89 ஆயிரத்து 350 ரூபாய் பறிமுதல்செய்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட 14பேர் கைது!
இதில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த14 பேரை கைதுசெய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 லட்சத்து 89 ஆயிரத்து 350 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அவர்களைச் சொந்த பிணையில் விடுவித்தனர்.