ஓசூர் வனச்சரகம், சானமாவு உள்ளிட்டப் பகுதிகளில் சுற்றித்திரிந்த 30க்கும் அதிகமான காட்டு யானைகள், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு எல்லையைக் கடந்து, கர்நாடக மாநில எல்லைக்குள் புகுந்தது. தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், யானைக்கூட்டம் இரண்டு, மூன்று குழுக்களாகப் பிரிந்து, நீரைத்தேடி தமிழ்நாடு வனப்பகுதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரையடுத்த சூளகிரி வனப்பகுதியில் 13 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் வர வேண்டாமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.