கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அத்திமுகம் கிராமத்தில், சுற்றித்திரிந்த நாய் ஒன்று திடீரென வெறிபிடித்து சாலையில் செல்பவர்களை கடிக்கத் தொடங்கியது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஓசூர் அடுத்த அத்திமுகம் கிராமத்தில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயம் - krishnagiri district news in tamil
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அத்திமுகம் கிராமத்தில் வெறிநாய் கடித்து காயமடைந்த பத்து பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![ஓசூர் அடுத்த அத்திமுகம் கிராமத்தில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயம் 10 injured rabbis bite](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10654522-300-10654522-1613492120203.jpg)
ஓசூர் அடுத்த அத்திமுகம் கிராமத்தில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயம்
ஓசூர் அடுத்த அத்திமுகம் கிராமத்தில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயம்
காயமடைந்த அனைவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெறிபிடித்து பொதுமக்களை கடித்துவரும் நாயைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 14 பேரைக் கடித்த நாய் : பிடித்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள்