தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்தூக்கி பழுது: 20 நிமிடங்கள் உள்ளே சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு - karur collector office lift repair

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்தூக்கி பழுதானதால் உள்ளே சிக்கிய இளைஞர் 20 நிமிடங்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.

youth-trapped-repair-lift
youth-trapped-repair-lift

By

Published : Jul 23, 2020, 4:10 PM IST

Updated : Jul 24, 2020, 2:42 PM IST

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூன்று தளங்களை கொண்டது. அதற்காக இரு மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு மின்தூக்கி பல மாதங்களாக பயன்படுத்தப்படாமலிருந்து வந்ததால் ஒரு மின்தூக்கியை மட்டுமே மக்கள், அலுவலர்கள் பயன்படுத்திவந்தனர்.

இந்த நிலையில் தனியார் கொரியர் நிறுவனத்தில் பணிபுரியும் கரூர் தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இன்று அந்த மின்தூக்கியை பயன்படுத்தினார். அப்போது மின்தூக்கி எதிர்பாராதவிதமாக பழுதாகி நின்றுவிட்டது. அதனால் அவர் உள்ளே மாட்டிக்கொண்டார்.

அதையடுத்து அவர் சத்தமிடவே 20 நிமிடங்களுக்குப் பிறகு அவரை ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர். மேலும் இரு மின் தூக்கிகளும் தற்போது பழுதாகிவிட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க: லிஃப்டில் சிக்கிய ஊழியர் மீட்பு

Last Updated : Jul 24, 2020, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details