தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு - கரூர் மாவட்ட செய்திகள்

கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அரசு பேருந்து
அரசு பேருந்து

By

Published : Jul 20, 2021, 7:53 AM IST

கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி அருகே சுக்காம்பட்டியை சேர்ந்தவர் அபிமன்யு(20). இவரும் அதேபகுதியை சேர்ந்த பிரதீபா(17) என்பவரும் நேற்று (ஜூலை 19) இருசக்கர வாகனத்தில் புலியூரிலிருந்து உப்பிடமங்கலம் வழியாக சுக்காம்பட்டி சென்றனர்.

அப்போது உப்பிடமங்கலம் மேம்பாலத்தில் திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் அபிமன்யு(20) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பிரதீபா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து வெள்ளியணை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தோல் நோயால் பாதிக்கப்பட்ட டீ மாஸ்டர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details