கரூர் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கரூரில் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.
கலைஞர்போல் வேடமணிந்து வாக்கு சேகரிக்கும் இளைஞர்! - கலைஞர்போல் வேடமிட்டு திமுக வாக்கு சேகரிப்பு
கரூர்: கலைஞர்போல் வேடமணிந்த இளைஞர் ஒருவர் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் கரூரில் இன்று வாக்கு சேகரித்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கரூரில் வாக்கு சேகரிப்பு
இந்நிலையில், அவர் செல்லும் வாகனத்திற்கு முன்பு திறந்தவெளி வாகனத்தில் இளைஞர் ஒருவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைப் போல் வேடமணிந்து வாக்கு சேகரித்து வருகிறார். இவருக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.