கரூர் மாவட்டம், திருச்சியிலிருந்து கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று கரூர்- திருச்சி சாலையைக் கடந்தபோது, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் மீது மோதியது. இதில் சதீஷ்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.